Thiru Adhipatha Nayanar history
nambiyar nagar
Thiru Adhipatha Nayanar was born in a fishermen clan located in a village Nunaipadi Nambiyar Nagar in Nagapattinam. He was a zealous devotee of Lord Shiva. Though he was born as an outcaste, his unyielding devotion to Lord Shiva raised him to a remarkable position amongst them. He worshipped Lord Amutheeswara situated in Nambiyar Nagar.
Thiru Adhipatha Nayanar’s source of income was derived out fishing. He made a practice of leaving the fish that first got into his net as an offering to Lord Shiva. He repeated this practice for very long time, thus it resulted him to stay hungry for several days. But Thiru Adhipatha Nayanar was not discouraged; he continued his selfless service to Lord Shiva attentively. One day Adhipatha Nayanar with his group arrived at the roaring shoreline and began their journey to the deep sea. Shortly, Adhipatha Nayanar captured a dazzling fish with all the glitters of precious stones. All his men were jubilant at the sight of the stunning and mystifying kind of creature on Nayanar’s net. The entire clan was overjoyed at the thought of the precious thing caught on the net and it could provide a luxurious life for all of them. Thiru Adhipatha Nayanar calmly allowed the sparkling fish to slip off from the net as an offering to Lord Shiva. The fishermen gathered were puzzled at the act of Thiru Adhipatha Nayanar. Instantly, there appeared Lord Shiva with his consort Goddess Sri Parvati blessed Thiru Adhipatha Nayanar and his clan with Salvation.
அதிபத்த நாயனார் வரலாறு
========================== =======
==========================
சோழ நாட்டின் துறைமுக நகராக நாகப்பட்டினம் விளங்கிய காலம். நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி நம்பியரார் நகர் என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.
ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபத்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழமையாக நிகழ்ந்தது. ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.
அதிபத்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிபடுமாறு செய்தார். அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது. அம்மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் கூறினார்கள். அன்றைய நாளில் அம்மீன் ஒன்றே கிடைத்தமையால், அதனை சிவபெருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம் செய்தார். அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு முக்தியளித்தார்.
பெயர்: அதிபத்த நாயனார்
குலம்: பரதவர்
பூசை நாள்: ஆவணி ஆயில்யம்
அவதாரத் தலம்: திருநாகை
முக்தித் தலம்: திருநாகை




